/* */

வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முறைகேடாக ஓப்பந்ததார்களுக்கு பணம் வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

HIGHLIGHTS

வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
X

வால்பாறை முன்னாள் நகராட்சி ஆணையளர் பவுன்ராஜ்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையளராக இருந்தவர் பவுன்ராஜ். இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி நகராட்சி பணத்தை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய திருப்பூர் மண்டல நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். மேலும் பவுன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மோசடி தொடர்பாக பவுன்ராஜ் மீது கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 15 கோடி மோசடி ஒரு வழக்காகவும், 35 லட்சம் மோசடி ஒரு வழக்காகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 15 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கை கோவை மாவட்ட குற்றபிரிவில் இருந்து கோவை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது புதியதாக மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நகராட்சி ஆணையருக்கு இருக்கும் அதிகாரத்தை தாண்டி, முறைகேடாக ஓப்பந்ததார்களுக்கு பணம் வழங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த உள்ளாட்சி துறை அதிகாரிகளில் பவுன்ராஜ் முக்கியமானவர் என கருதப்படும் நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!