உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 2 லட்சம் பறிமுதல்

உரிய  ஆவணங்கள் இல்லாத ரூ. 2 லட்சம் பறிமுதல்
X

பொள்ளாச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு வாகன சோதனை நடத்தியது. அப்போது அந்த வழியாக வந்த ராமு என்பவரின் மோட்டார் பைக்கை சோதனை செய்தனர்.

அப்போது அதில் உரிய அனுமதியின்றி ரூ.2 லட்சம் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது .அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அந்த பணம் ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வால்பாறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமியிடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு