வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக; ஏமாற்றத்தில் அதிமுக

வால்பாறை நகராட்சியை கைப்பற்றியது திமுக; ஏமாற்றத்தில் அதிமுக
X
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியை, அதிமுகவிடம் இருந்து திமுக கைப்பற்றியது.

வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க. போட்டியிட்டது. மேலும் 3, 12, 17, 20 ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

இதில், மொத்தமுள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று, கைப்பற்றி இருக்கிறது. அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story