நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம்

வள்ளி கும்மி அரங்கேற்றம்
தமிழரின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புறக் கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியு ள்ளது.
இதை ஒட்டி 26-வது சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் சோமனூர் அடுத்த காடுவெட்டிபாளையம் விநாயகர்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 130 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.
சோமனூரை சேர்ந்த ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் ஒயிலாட்ட கலையையும் வள்ளி கும்மியாட்ட கலையையும் மீட்டெக்கும் முயற்சியில் பல்வேறு கிராமங்களில் தனது குழுவை அமைத்து வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டக் கலையை அரங்கேற்றி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கலையை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார்.
இவரது பயிற்சியில் தற்போது சோமனூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்
நிகழ்ச்சியில் ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.
நாட்டுபுறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெதெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து ஆறு மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருக்கி வருகிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ வள்ளி கும்மி ஆட்ட கலைக்குழுவுக்கு . 50 ஆயிரம் பரிசு வழங்கினார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu