கோவை மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் துவங்கியது

கோவை மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்  மீண்டும் துவங்கியது
X

தடுப்பூசி மையம்

கோவை மாநகராட்சியில் 36 மையங்களில் 6840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக தடுப்பூசி போடும் பணியானது நடைபெறவில்லை. இதனால் ஊசி போட வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மையங்களுக்கும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கோவை மாநகாரட்சிக்கு உட்பட்ட 36 மையங்களில் இன்று பிற்பகல் முதல் கோவேக்சின் தடுப்பூசி போடப்படும் என தடுப்பூசி மையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஓவ்வொரு மையத்திலும் 190 பேருக்கு மட்டும் இன்று கோவேக்சின் இரண்டாம் தவணை ஊசி செலுத்தப்படுகின்றது, இவ்வாறு கோவை மாநகராட்சியில் 36 மையங்களில் 6840 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. முதல் தவணை தடுப்பூசி இன்று போடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு