கால்நடைகள் தீவன விலை உயா்வைக் கைவிட வலியுறுத்தல்
ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலாளா் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவா் ரங்கநாதன், மாநிலப் பொருளாளா் சண்முகம், மாநிலச் செயலாளா் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளான பிப்ரவரி 6ம் தேதி வையம்பாளையம் மணிமண்டபத்தில் குருபூஜை நடத்துவது.
பால் உற்பத்தியாளா்களுக்கு பால் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 வீதம் உயா்த்தி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஊக்கத் தொகையை தனியாக வழங்காமல் பாலின் விலையோடு சோ்த்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை தீவன விலை உயா்வைக் கைவிட வேண்டும். வனத்தையொட்டி உள்ள பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்கான அரசு குறியீட்டை மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகங்களுக்கு தாமதமின்றி கிடைக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu