வால்பாறை- சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை
வால்பாறை அருகே ஏற்பட்ட மண்சரிவு
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட சாலக்குடி அருகே அதிர ப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளது. அங்கு பல்வேறு மாநிலம் மற்றும் வெளி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மழுக்க பாறை எஸ்டேட் வழியாக 80 கிலோமீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருகின்றனர்.
வன பகுதி வழியாக செல்லும் போது வனவிலங்குகளை பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என்பதால், அந்த சாலையில் பயணிக்க அதிகளவில் விரும்புவார்கள்.
மழுக்கப் பாறை பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஆதிவாசி பழங்குடி மக்களும் அத்தியாவசியமான பொருட்கள் வாங்கு வது உள்பட பல்வேறு வேலைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கும் முன்பு மழுக்குப்பாறை அதிரப்பள்ளி சாலை இடையே ஆம்பளபாறை என்ற இடத்தில் கன மழை பெய்து மண்அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப் பட்டது.
உடனடியாக சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் சாலையை முழுமையாக சீரமைக்க முடிவு செய்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்துக்கு நேற்று வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அந்த வழியாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டி ருந்தது. இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. பணி முற்றிலும் நிறைவடையும் வரை வால்பாறை-சாலக்குடி இடையே போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஹோட்டல்ஸ் மழுக்குப்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள், வனப்பகு தியில் இருக்கும் ஆதிவாசி பழங்குடியின மக்கள் ஆகி யோர் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சாலையை விரைவாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu