நல்லகாத்து ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நல்லகாத்து ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
X

மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் முத்துசாமி

ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கூலாங்கள் பகுதிக்கு சென்று சோலையார் எஸ்டேட் பகுதி வழியாக சென்று மீண்டும் நல்லகாத்துப் பகுதி வழியாக வனப்பகுதிக்கு செல்கிறது.

இந்த ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.

அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நல்ல காத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் பலியானதை அடுத்து நேற்று முதல் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த இடத்தை, அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு, இனி இதுபோன்ற விபத்துக்கள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அதிகாரிகள், அங்கு பொதுமக்கள் செல்லாதவாறு வேலி அமைத்து தடை விதிக்கலாம் என தெரிவித்தனர். அதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அந்த பகுதியில் இறந்த மாணவர்களின் புகைப்படங்களை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட செயல்லார் தளபதி முருகேசன், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், தாசில்தார் அருள்முருகன், நகராட்சி ஆணையாளர் பேற்பெட்டி லியோ, நகர செயல்லார் சுதாகர், முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், உள்பட பலர் இருந்தனர்

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!