கோவை மாநகராட்சியில் நாளையும் தடுப்பூசி முகாம் நடைபெறாது

கோவை மாநகராட்சியில் நாளையும் தடுப்பூசி முகாம் நடைபெறாது
X
தட்டுப்பாடு தொடர்வதால், கோவை மாநகராட்சியில் நாளையும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இருப்பினும், தடுப்பூசி இருப்பு குறைவு காரணமாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படவில்லை. அவ்வகையில், நாளை வெள்ளிக்கிழமையும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!