டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: கோவையில் 58 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை
கோப்புப்படம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அரசின் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் உள்ளிட்ட காலி பணிகளுக்கான அறிவிப்பு (குரூப்-3 ஏ) கடந்த செப்டம்பர் 15-ந் தேதி வெளியானது.
இதில் இளநிலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பும், பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 12-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு 2023-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வு தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 19 மைங்களில் நடைபெற்றது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 3 ஏ தேர்வுக்கு கோவை மாவட்டத்தில் மொத்தம் 5,954 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் நேற்று 2,518 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 58 சதவீதம் பேர் அதாவது 3,436 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் தேர்வு மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
குரூப்-3 ஏ எழுத்து தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி பொதுதமிழ் இதில் 100 வினாக்கள் கேட்கப்படும், இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண் எடுக்க வேண்டும். இரண்டாம் பகுதி பொதுஅறிவு இதில் 100 வினாக்களுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu