திமுகவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு உடை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எஸ்.பி.வேலுமணி, ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு அறிவித்தார்கள். ஆனால் எதையும் செயல்படுத்த வில்லை. நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பது, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மேகதாதுவில் அணை கட்டிவதை தடுப்பது போன்ற எதையும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாத அரசாக இந்த அரசு இருக்கின்றது.
கொரொனா தொற்று தடுப்பில் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை எனவும், திமுக அரசு வந்த வேலுமணி ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் இறந்திருக்கின்றனர். டெல்லியில் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க வேண்டும் எதிர்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கோரிக்கை விடுத்தனர்.
இது போன்ற செயல்களை செய்யாமல் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, காவல் துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த அரசு ஈடுபடுகின்றது. காவல் துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். காவல்துறை மிரட்டலுக்கு அதிமுகவினர் அஞ்ச மாட்டோம். நாங்கள் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து இருக்கின்றார்கள். கையாலாகாத அரசாக இந்த அரசு இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர், கொரோனா இறப்பை இந்த அரசு குறைத்து காட்டுவதாகவும், இவ்வளவு இறப்பிற்கு காரணம் இந்த அரசு. அதிமுக ஆட்சியில் மோசமாக இருந்த ஊரக சாலைகளை புதுப்பிக்க போடப்பட்டு இருந்த சாலை டெண்டர்கள் ரத்து செய்து இருப்பதை கண்டிப்பதாகவும், காவல் துறை நடுநிலமையுடன் செயல் பட வேண்டும் அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu