தென்மேற்கு பருவமழை தீவிரம்: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை தீவிரம்:  கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
X

வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம் அருவி.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய கோவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணபட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நொய்யலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை பகுதி மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

Tags

Next Story
crop opportunities ai agriculture