கருத்து கணிப்பு என கருத்து திணிப்பு செய்வதாக, எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

கருத்து கணிப்பு என கருத்து திணிப்பு செய்வதாக, எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
X

Coimbatore News- பத்திரிகையாளர்களை சந்தித்த எஸ்.பி. வேலுமணி

Coimbatore News- கருத்து கணிப்புகள் என்பது சரியானது அல்ல. கருத்து திணிப்பு செய்கிறார்கள் என்று எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டினார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஐடி விங்க் நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரிய கட்சியாக, உலகத்தில் ஏழாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதிகமான ஐடி விங்க் உறுப்பினர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்கள்.

ஐடி விங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. திமுக, பாஜக ஐடி விங்க் பொய் பரப்புரை செய்கிறார்கள். மற்ற ஐடி விங்க் ஒருவர் இருந்து கொண்டு, இருபது பேர் இருப்பது போல போடுவார்கள். அதிமுக ஐடி விங்க் சரியான தகவல்களை போடுவார்கள். ஆபாசமாக போடமாட்டார்கள். பொய்யான தகவல்களை பரப்ப மாட்டார்கள். மற்றவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் பரப்புரைகளுக்கு பதிலடி தரும் வகையில் ஐடி விங்க் செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்.

தற்போது எல்லோரும் போன் வைத்திருக்கிறார்கள். ஒரு கோடிக்கும் வாக்குகளை கவரும் வாய்ப்பை அதிமுக ஐடி விங்க் உருவாக்கும். விளவங்கோடு தேர்தலில் போட்டியிடுவது குறித்து எடப்பாடியார் முடிவு செய்வார். தேமுதிக உடனான கூட்டணிக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி அவர்களை பார்த்தோம். அதிமுகவில் கூட்டணி குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக குழு அமைக்க உள்ளது. இரண்டு குழுவும் சேர்ந்து பேசி முடிவு செய்வார்கள். மற்றது எல்லாம் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

எந்த கட்சியிலும் கூட்டணி முடியவில்லை. திமுகவில் காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டதா? எல்லா கட்சியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கவில்லை. கருத்து கணிப்புகள் என்பது சரியானது அல்ல. கருத்து திணிப்பு செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் பெரிய இயக்கம். திமுக எந்த திட்டமும் தரவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!