தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும்- எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும்-  எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
X

தொண்டாமுத்தூர்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தடுப்பூசி கிடைப்பதற்கு ஆவண செய்வதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி மையத்தில் உள்ள மருத்துவர்கள் 130 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, மக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்