கோவை அருகே வாகனம் கவிழ்ந்து 2 பேர் பலி - 7 பேர் படுகாயம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, துப்புரவு பணியாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி. இப்பகுதியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஒன்பது பேர், இன்று பணி முடித்து, மூன்று சக்கர பேட்டரி வாகனத்தில் பயணித்து உள்ளனர். இதனை ராசு என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

வாகனத்தை அதிக வேகமாக ராசு இயக்கியதால், நொய்யல் பாலத்தை கடக்க முயன்றபோது கட்டுபாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது. இதில் பழனி (60) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு பொதுமக்கள் கூடியனர், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழனிசாமி (60) என்ற நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்த 7 பேர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!