இறுதி சடங்கு கோலத்தில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்

இறுதி சடங்கு கோலத்தில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள்
X

மனு அளிக்க வந்த பெண்கள்.

பட்டா வழங்கப்பட்டவர்கள் வீடு கட்டி குடியேறுவதற்கு முற்படும் போது, இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தெலுங்குபாளையம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் 2000ம் ஆண்டில் பட்டா ரத்து செய்யப்பட்ட சில நபர்களும் அங்கேயே குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட தாங்கள் அங்கு வீடு கட்டி குடியேறுவதற்கு முற்படும் போது, அங்கு இருக்கக்கூடியவர்கள் இடையூறு விளைவிப்பதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து தீர்வு தர வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது சிலர் இறுதிச்சடங்கில் செய்வதை போல தலைக்கு மேல் துணியை பிடித்தவாறு வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் கூறினால் காவல் துறையில் புகார் அளிக்க கூறுவதாகவும், காவல் துறையில் புகார் அளிக்க சென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே கூறுங்கள் என்று தங்களை அலைகழிப்பதாக குற்றம் சாட்டினர். தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
ai automation in agriculture