கோவை கமலாம்பாள் இட்லி பாட்டிக்கு இலவச நிலம் தந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி
நிலம் வழங்கிய எஸ்.பி. வேலுமணி
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 90 வயதான இவர், பல வருடங்களாக அப்பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். பல வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருவதால், கமலாத்தாள் இட்லி பாட்டி என அழைக்கப்படுகிறார்.
இது குறித்த செய்திகள் வெளியானதன் காரணமாக, கமலாத்தாள் இட்லி பாட்டி என பிரபலம் அடைந்தார். மேலும் அவரது நேர்மையையும், சேவையையும் பாராட்டும் விதமாக பல்வேறு தரப்பினரும் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்று இட்லி பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கமலாத்தாள் பாட்டியின் சேவையை பாராட்டும் வகையில், அவரது வீட்டின் அருகில் இரண்டு செண்ட் நிலம் வாங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதனை கமலாத்தாள் பெயருக்கு பத்திரபதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து இடத்தின் பத்திரத்தை பாட்டி கமலாத்தாவிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒப்படைத்தார். அவருக்கு கமலாத்தாள் பாட்டி நன்றி தெரிவித்தார். இட்லி பாட்டிக்கு எஸ்.பி. வேலுமணி நிலம் வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu