சிறுவாணி அணை 42 அடியை எட்டிய நிலையில் 1000 கனஅடி நீரை திறந்து விட்ட கேரளா
தண்ணீரை வெளியேற்றிய கேரள அதிகாரிகள்
கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகள் மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு சிறுவாணி அணையின் இருந்து எடுக்கப்படும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 23 ம் தேதி அணையின் நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தற்போது 42.02 அடியாக உயர்ந்து உள்ளது.
சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டுள்ள நிலையில், கேரள அரசு 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி அளித்து வருகிறது. கன மழை தொடரும் நிலையில் 45 அடி உயரத்தை சிறுவாணி அணை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவசரகால வழியாக வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி தண்ணீரில் சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் திறந்து விட்டு உள்ளனர்.
திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஆயிரம் கன அடி தண்ணீரை கேரள அரசு வெளியேற்றி வருவது தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அணை முழு கொள்ளவை எட்டாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu