பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மாநகராட்சி பணியாளர்களை இடமாற்றக் கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
Sanitation Workers Agitation
கோவை மாநகராட்சிக்குட்பட்ட குனியமுத்தூர் 88-வது வார்டு பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, பணியைப் புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர் கூறுகையில், கடந்த ஒரு வருடங்களாக தூய்மை பணியாளராக 88-வது வார்டில் பணி புரிந்து வருவதாகவும், பணி நிரந்தரம் செய்வதற்காக சுகாதார ஆய்வாளர் தனபால் என்பவர் பணம் கட்ட சொல்லுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். பணம் தர மறுத்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அவர் துன்புறுத்தி வருவதாக தூய்மை பணியாளர் வேதனை தெரிவித்தார்.
அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாவிட்டால் அடுத்த வார்டுக்கு பணியை மாற்றி விட்டு துன்புறுத்தி வருவதாகவும், அடுத்த வார்டில் இருக்கும் நபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்தனர். மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளர் உதயகுமார் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், பணிக்கு வந்தால் பணிக்கு வரவில்லை என்று பொய்யாக குற்றம் சுமத்தி அவர்களின் சம்பள பணத்தை பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் பெண் தூய்மை பணியாளர்களை அவர் இழிவாக பேசி வருவதாகவும், உதயகுமாரின் சித்தப்பா வேலுச்சாமி செய்வினை செய்து விடுவதாக தூய்மைப் பணியாளர்களை மிரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது அவர்கள் பொய் புகார்கள் அளித்து வருவதாக கூறிய அவர், மாநகராட்சி ஆணையாளர் தலையிட்டு உதயகுமார், வேலுச்சாமி உள்ளிட்ட 4 பேரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu