கோவையில் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடிய வட மாநிலத்தினர்

கோவையில் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடிய வட மாநிலத்தினர்
X

கோவையில் வடமாநிலத்தினர் ரக்‌ஷா பந்தன் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

உலக அமைதியை முன்னிறுத்தி மேளதாளம் இசைத்து பாடல்கள் பாடி வடமாநில மக்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் வலிமையை உணர்த்தும் விதமாக ரக்‌ஷா பந்தன் விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். வட மாநிலத்தவரின் பண்டிகையான இது தற்பொழுது தமிழகத்திலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகின்றது. சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர் உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டனர். உலக அமைதியை முன்னிறுத்தும் விதமாகவும், அமைதியை வலியுறுத்தியும் மேளதாளம் இசைத்து பாடல்கள் பாடி வடமாநில மக்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

வழிபாட்டுக்குப் பின்னர் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினா். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர். வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறுகளை கட்டி சகோதர, சகோதரிகள் அன்பின் வலிமையை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story
ai as the future