டோக்கன் பெற்றவர்களுக்கும் தடுப்பூசி இல்லை: கோவையில் தொடரும் குளறுபடி
பற்றாக்குறை காரணமாக, கோவையில் உள்ள தடுப்பூசி மையம் பூட்டப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும், தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனினும், மாவட்டத்தில் 12000 தடுப்பூசிகள் மட்டுமே இன்று கையிருப்பு இருந்தது. இதன் காரணமாக, இன்று பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.
இந்நிலையில், சிறப்பு மையங்கள் மூலம் முதியோர் இல்லம், மின் ஊழியர்கள், வன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் 5,150 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரக பகுதிகளில் 16 மையங்களில் தலா 6,400 ஊசிகள் செலுத்தப்பட்டது.
இதனிடையே, கோவை மாதம்பட்டி அரசுப்பள்ளியில், தடுப்பூசி மையத்தில் நள்ளிரவு காத்திருந்த மக்களுக்கு, அதிகாலை 5 மணிக்கே டோக்கன் வழங்கப்பட்டது. எனினும், காலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் , தடுப்பூசி போடப்படாதது கண்டும் ஏமாற்றமடைந்து சென்றனர்.
கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவது, டோக்கன் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாக பொதுமக்கள் வேதனையோடு குறிப்பிட்டனர். இதனை, மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu