சாலையில் மண்ணை கொட்டிய கிராம மக்கள்: ஆவேசத்துக்கு காரணம் இதுதான்

சாலையில் மண்ணை கொட்டிய கிராம மக்கள்: ஆவேசத்துக்கு காரணம் இதுதான்
X

ஆலாந்துறை அடுத்த சப்பாணிமடை கிராமத்தில், சாலையில் மண்ணைக் கொட்டி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ஆலாந்துறை அருகே, உடனடியான சாலையை விரிவுபடுத்தக்கோரி, ரோட்டில் மண்ணைக்கொட்டி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த சப்பாணிமடை கிராமத்திற்கு செல்லும் 30 அடி சாலையை, அதே பகுதியில் புதிதாக நிலம் வாங்கிய உரிமையளார்கள் எடுத்துக் கொண்டனர். இதனால், பேருந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை சுருங்கி உள்ளது.

மேலும், இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, சாலையை விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அக்கிராம மக்கள், சாலையில் மாட்டு வண்டி மூலம் மண்ணை கொட்டி, ரோட்டை அடைத்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியான சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்தில் பேரூர் வட்டாச்சியர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்தில் பேசி முடிவு செய்யப்படும் என்று, அவர் உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!