விபத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு கேட்டு ஆட்சியரிடம் மனு

விபத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு கேட்டு ஆட்சியரிடம் மனு
X

துப்புரவு பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்

நொய்யல் பாலத்தை கடக்கும் போது கட்டுபாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி. இப்பகுதியில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்கள் ஒன்பது பேர் நேற்று பணி முடித்து குப்பை அள்ளும் பேட்டரி வீடு திருப்பி கொண்டிருந்தனர். பேட்டரி வாகனத்தை ராசு என்பவர் அதி வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இக்கரை போளுவாம்பட்டி நொய்யல் பாலத்தை கடக்கும் போது கட்டுபாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பழனி (60)வயது சம்பவ இடத்திலேயே பலியானர். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பழினிச்சாமி(50) என்பவர் வழியிலேயே மரணமடைந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவு சங்க பணியாளர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் அவர்களது குடும்பதில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்ப்பிடபட்டு இருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சமூக நீதி கட்சி தலைசர் பன்னீர் எவ்வித பாதுகாப்பும் இன்றி துப்புறவு பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றது தவறு என்றார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!