கோவையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

கோவையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
X

உயிரிழந்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

200 மீட்டர் தொலைவிற்கு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று குழியை மூடும் பணிகள் நடைபெற்றது.

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள வடக்கு வீதியில் இருந்து நொய்யல் ஆறு வரை பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், இன்று குழியை மூடும் பணிகள் நடைபெற்றது.

இதற்காக இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் வர வழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த பழைய திருமண மண்டபத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் கட்டுமான இடர்பாடுகளில் சிக்கி வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பேரூர் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் வேல்முருகன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture