கோவை அருகே காட்டு யானை தாக்கி குடியிருப்பு காவலாளி உயிரிழப்பு
கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் மலைஅடிவாரத்தில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் இரவு நேர காவலாளியாக, கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல், காவல் பணியில் இருந்த முத்துச்சாமி, இன்று காலை 6 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வந்து அருகில் உள்ள பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது, ஒற்றை ஆண் யானை, முத்துசாமியை தும்பிக்கையால் தாக்கியத்ய். படுகாயமடைந்த முத்துசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தப்மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர், முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றிரவு, இப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தெரிவித்தும், ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது தடாகம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் யானை நடமாட்டம் உள்ளதால், இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu