கெம்பனூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை கண்காணிப்பு

கெம்பனூர் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை கண்காணிப்பு
X

சிசிடிவி கேமரா பொருத்திய வனத்துறை

இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவித்தி உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனூர் அருகே உள்ள ஆட்டுக்கல் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்டுக்கல் பகுதியில் சுரேஷ் என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்து இன்று காலை சுரேஷ் வெளியே செல்ல வந்த போது, அப்பகுதியில் ஒரு சிறுத்தை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மீண்டும் வீட்டை பூட்டி கொண்டு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டுக்கு உள்ளே இருந்து உள்ளனர்.

இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் குறித்து அவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் பேரில் வனத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவித்தி உள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil