இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு ; மாணவ, மாணவிகள் அசத்தல்..!

இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு ; மாணவ, மாணவிகள் அசத்தல்..!
X

இந்திய வரைபடம் போல நின்ற மாணவ, மாணவிகள்

ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்

இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் கோவையில் உள்ள கோவைப்புதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் இந்தியா சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் பல்வேறு பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தைதை போல குழுவாக மாணவர்கள் பிரிந்து நின்றனர்.

’பிரித்தானியாவின் இந்தியா’ என வரலாற்றில் கூறப்பட்ட காலத்தில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோர் இணைந்து மாநிலங்களை இணைப்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பிரிந்து கிடந்த 17 மாநிலங்கள் இணைந்து இந்தியாவாக மாறியதை தனி தனி குழுவாக நின்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக இணைந்து ஒருங்கிணைந்த இந்திய வரைபடமாக நின்றனர். தொடர்ந்து தேசிய கொடி வண்ணங்களை கைகளில் பிடித்தபடி நின்ற மாணவர்களின் அணிவகுப்பு தத்ரூப இந்திய வரைபடமாக காட்சியளித்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!