கோவையில் காட்டு யானை தாக்கி வனப்பணியாளர் படுகாயம்

கோவையில் காட்டு யானை தாக்கி வனப்பணியாளர் படுகாயம்
X

படுகாயமடைந்த விஜயகுமார்

கோவை அருகே, காட்டு யானை தாக்கியததில் வனப்பணியாளர் படுகாயம் அடைந்தார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில், ஓட்டுநராக, கோவை குற்றாலம் சுற்றுலா தலத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு வராமல் நண்பர்களுடன் வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள வன சோதனைச்சாவடி அருகே சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வந்த காட்டு யானை விஜயகுமாரை தாக்கியுள்ளது. இதில், அவரது இரு கால்களின் தொடைபகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை பிஎஸ்ஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story