ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை
X

நெருஞ்சி முள் குட்டையிலிருந்து வெளியேறும காட்டு யானைகள்.

தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறைத்துறையினர் வனப்பகுதுக்குள் விரட்டியடித்தனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வைதேகி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஓடைகள் உள்ளதால் எப்போதும் பசுமையாக காணப்படும்.

இப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவிற்காக இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராம பகுதிக்குள் வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு நரசிபுரம் கிராமத்திற்குள் புகுந்த இரண்டு ஆண் யானைகள் இன்று அதிகாலை வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்டது. அப்போது, ஆட்கள் நடமாட்டம் அதிகரித்ததால் ஆத்தூர் சிறுவாணி குழாய் அருகே உள்ள நெருஞ்சி முள் குட்டையில் தஞ்சம் அடைந்தது.

தண்ணீர் மற்றும் அதற்கு தேவையான தீவனம் அங்கு இருந்ததால் யானை குட்டைக்குள் நின்று கொண்டது. இது குறித்து போளுவாம்பட்டி வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வனத்துறையினர் சென்று யானைகளை கண்காணித்தனர்.

யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக மதுக்கரை, கோவை, பெரியநாயக்கன் பாளையம் ஆகிய வனச்சரகங்கள் இருந்து 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, யானைகளை கண்காணித்து வந்தனர்.

மேலும் மாலை நேரத்தில் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். அப்போது பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும்,குட்டையில் இருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து, ஓடை வழியாக வெளியேறிய இரண்டு ஆண் யானைகள், நரசிபுரம் பகுதி வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து இந்த இரண்டு யானைகளும் மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture