ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
X

கள்ளிப்பாளையம் பகுதியில், ஊராடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை நாதேகவுண்டன்புதூர், கள்ளிப்பாளையம் பகுதிகளில், ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு திட்டத்தை, எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறாடாவுமான எஸ்.பி வேலுமணி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.

அவ்வகையில், பூலுவப்பட்டி, உரிபள்ளம்புதூர், கள்ளிபாளையம் வடிவேலம்பாளையம், நாதேகவுண்டன்புதூர், கிளியக்கவுண்டன் பாளையம் கள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில், ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை, அவர் இன்று துவைக்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம், அதிமுக சார்பில் உணவு வழங்கப்படுகிறது. மேலும் நோய்த்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக முகக்கவசங்களையும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஆகியனவும் வழங்கினார்.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?