தொண்டாமுத்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்: மக்கள் அவதி

தொண்டாமுத்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்: மக்கள் அவதி
X

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

ஊராட்சி நிர்வாகம் துரிதக் கதியில் செயல்பட்டு மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

கன மழை காரணமாக தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை திருவிக நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்,வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் அப்பகுதி வாசிகள், வழக்கமாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனடியாக மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை யாரும் வராத நிலையில் நோய் தொற்று அபாயம் எழுந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஊராட்சி நிர்வாகம் துரிதக் கதியில் செயல்பட்டு மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself