கோவையில் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் திமுக வெற்றி
X
கோவை மாநகராட்சி 92 வது வார்டில், 456 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

கோவை மாநகராட்சியில், மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை அறிவிக்கப்பட்ட 76 இடங்களில் 72 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. திமுக 57, காங்கிரஸ் 7, சிபிஎம் 4, மதிமுக 2, சிபிஐ 2 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 3, எஸ்.டி.பி.ஐ 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில், கோவை மாநகராட்சி 92 வது வார்டு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சொந்த வார்டாகும். இதில் திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் செல்லப்பனை விட 456 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!