தொடர் மழை: கோவை குற்றாலம் மூடல்

தொடர் மழை:  கோவை குற்றாலம் மூடல்
X

கோவை குற்றாலம் (பைல் படம்).

கோவை குற்றாலத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை குற்றாலம் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கோவை குற்றாலத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதனால் கோவை குற்றாலத்திற்கு பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போளுவாம்பட்டி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!