பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்

பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்
X

பதக்கம் வென்ற மாணவர்கள்

எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

எலும்பு மூட்டுக்களின் கலையாக பார்க்கப்படும் முய் தாய் சண்டை கைமுட்டிகள், முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் தாடைகள் கொண்டு பாக்சிங் வகை போட்டியாக நடைபெறுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த கலைகளை தற்போது மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கற்று வரும் நிலையில், மாநில, தேசிய அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய மற்றும் தமிழ்நாடு முய் தாய் பாக்சிங் அமெச்சூர் சங்கத்தின் சார்பாக மூன்றாவது மாநில அளவிலான போட்டி அண்மையில் சென்னை ஆவடியில் நடைபெற்றது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம், ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். வயது, எடை, ஓபன் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவை ’ஆக்டகன் ஃபைட்ஸ்’ கிளப்பை சேர்ந்த 15 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் முறையே எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இதே போல இதில் இன்னொரு பிரிவான ப்ரோ பாக்சிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழகத்தில் முதன் முறையாக கோவையை சேர்ந்த நஃபீல் என்ற சிறுவன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் போட்டியாக முய் தாய் நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டிகளை இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் பாக்சிங் போன்ற போட்டிகளுக்கு தனி அரங்கம் அமைந்துள்ளது போல இந்த போட்டிகளுக்கும் அரங்கம் அமைத்து தர அரசு முன் வரவேண்டும் என பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story