அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது : அண்ணாமலை

அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது : அண்ணாமலை

Coimbatore News-  பாஜக தலைவர் அண்ணாமலை

Coimbatore News- முதலில் 1000 கடைகளை அடைக்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை ஈஷா யோகா மையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”சர்வதேச யோகாவை உலகம் முழுவதும் இந்தியர்கள் எடுத்து செல்கின்றனர். பிரதமர் ஸ்ரீ நகர் பகுதியில் யோகா செய்து வருகிறார். நாம் இன்று இங்கு யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். இன்று கிரிய பயிற்சி செய்து உள்ளோம். மன அழுத்தத்தின் ஆரம்ப புள்ளியாக செல்போன் பயன்பாடு வந்துள்ளது. தற்கொலை வரைக்கும் சோசியல் மீடியா கொண்டு சென்றுள்ளது. நம்முடைய வாழ்வியலை உள்நோக்கி பயணம் செய்ய வேண்டும். காலம் வேகமாக நம்மை ஓட வைக்கின்றது. தனிமையாக இருந்தாலும் இன்பமாக வழ வேண்டும்.

ஈஷா அரசியல் சார்ந்த பகுதி இல்லை. இங்கு அரசியல் பேசுவது சரியில்லை. பள்ளிக்கல்வி துறையில் யோகா கொண்டு வர வேண்டும். புதிய கல்வி கொள்கையில் யோகா இடம்பெறும் அம்சங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் யோகா கட்டயா பாடமாக கொண்டு வர வேண்டும். நான் படித்த படிப்பிற்க்கு, நான் வாங்கும் மார்க், நான் செய்யும் வேலைக்கு சம்பந்தம் இல்லை. விருப்பம் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து கல்வி கற்பது தான். நல்ல புரிதல் இருக்க வேண்டும். யோகா டி அடிக்க்ஷன் ரொம்ப முக்கியமானது.

நான் காவல் துறையில் இருக்கும் போது, மன அழுத்தம் அதிகளவில் இருந்தது அப்போது அதிலிருந்து வெளிப்பட ஈஷாவிற்கு வந்தேன்.மன அழுத்தம் வெளியே வர யோகா எனக்கு மிகப்பெரிய கருவி. கள்ளக்குறிச்சி போன்ற சம்பவங்களால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தாமரை இலை போல் தண்ணீர் போன்று இருக்க வேண்டும். அதற்கு யோகா உதவி செய்யும்.

பெண்கள் என்னை கட்டி அழுதது என்னை அதிகளவில் பாதித்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் பணம் கொடுப்பது என பார்க்கிறோம். ஈம காரியம் செய்ய கூட பணம் இல்லை. அந்த குடும்பம் கஷ்டம் வெளியே வர பணம் கொடுக்கிறோம். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. பாஜக சார்பிலும் 1 இலட்சம் அறிவித்துள்ளோம். தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை. கள் கடைகள் கொண்டு வரும் நேரமிது. குடிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையாக கள்ளு கடை திறக்க வேண்டும்.

முதலில் 1000 கடை அடைக்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகள் மூட வேண்டும். அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது. மது விற்பனை, கள்ளு விற்பனை அரசு கண்காணிக்க வேண்டும். அரசிற்கு வருமானம் வரட்டும். அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை சரியில்லை. முதலமைச்சர் கையில் இருக்கும் துறையில் பிரச்சனை உள்ளது. இளைஞர்களிடம்போதை பழக்கம் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story