கோவை குற்றாலத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

கோவை குற்றாலத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி
X

கோவை குற்றாலம்

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிகளுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் அர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் அருவிகளுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்து இருப்பதால், கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ உகந்த சூழல் நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால், வார இறுதியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்