உரிமம் இல்லாத ரிசார்ட்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன்
அமைச்சர் மதிவேந்தன்
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில் 27 வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இவ்விழாவில் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார். மேலும் இவ்விழாவில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன் மற்றும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது இங்கு நடைபெறும் போட்டியில் தேர்வு ஆகும் நபர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். வனத்துறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளது. TNPC தேர்வாணையம் மூலம் பணியிடங்கள் நிரப்பி வருகிறோம். யானை வழித்தடங்கள் மீட்பதில் தடங்கள் இல்லை. வழித்தடத்தில் உள்ள தடங்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் யானை வழித் தடம் அறிவிப்பு வரும். மாஞ்சோலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.
யானை மனித மோதல் தடுக்க வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. யானை காட்டு அனுப்பும் பணி நடைபெறும். தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது மகிழ்ச்சியான ஒன்று எனவும் வனவிலங்கு பிரச்சனை எல்லா பக்கமும் உள்ளது. அதிகம் பிரச்சனை உள்ள இடங்களில் அதிகளவில் கவனம் செலுத்து அங்கு ஆய்வு செய்து வருகிறோம். அனுமதி இல்லாமல் ரிசார்ட்கள் இயங்கவில்லை. உரிமத்துடன் இருப்பதாக சொல்லுகிறார்கள். உரிமம் இல்லாத ரிசார்ட்களை குறிப்பிட்டால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மருதமலை அருகே உள்ள குப்பை கிடங்கு அகற்றும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுகிறேன். வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியம் உயர்வு ஆலோசனை நடத்தி வருகிறோம். உரிமம் இல்லாத ரிசார்ட்களை குறிப்பிட்டு சொல்லுங்கள். அப்போது தான் நடவடிக்கை எடுக்கப்படும். நன்னீர் நாய்கள் அழிவு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம். வரையாடுகள் மீது தனி கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu