நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக  போட்டி
X
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்தேச புலிகள் கட்சி தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'இந்த தொகுதியில் வேலை கேட்டு வந்திருக்கின்றேன். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என நினைத்து வந்தேன். தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பண்பிற்காகவே இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். தென்னந்தோப்பு, வாழை எல்லாம் இருப்பதால் , பனை,பாக்கு மரம் இருப்பதால் இயற்கை விவசாயத்தை ஊக்கு விக்க இந்த தொகுதியில் நிற்கின்றேன். தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என வந்த நிலையில், கமல் அங்கு போட்டியிடுவதால் அவருக்காக விட்டுக்கொடுத்து விட்டு தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்து விட்டேன்.

நான் கமலுடைய பெரிய விசிறி. ஆனால் கமல் என்னுடைய சிஷ்யனாக இருக்கின்றார். திண்டுக்கல்லில் நான் செய்ததை அவர் செய்கின்றார். இந்த தொகுதி மக்களின் கோரிக்கையை ஒரு வருடத்தில் செய்து கொடுக்காவிட்டால் உடனே ராஜினாமா செய்வேன். நான் தனிப்புலி் எனக்கு முன்னாடியும் பின்னாடியும் யாரும் இல்லை. தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன். அதிமுகவில் அமைச்சர் வேலுமணி 15 வருசம் எம்.எல்.வாக இருந்துட்டாரு. நான் வேலைகேட்டு வந்து இருக்கின்றேன் என்றார்.

Tags

Next Story