வடவள்ளி அருகே கோவில்களில் திருட்டு

வடவள்ளி அருகே கோவில்களில் திருட்டு
X

கருப்பராயன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ள காட்சி 

வடவள்ளி அருகே உள்ள கருப்பராயன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு

கோவை மருதமலை சாலை முல்லை நகர் அருகே உள்ள கருப்பராயன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் கோவிந்தராஜ் என்பவர் உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலில் ஏதோ உடைப்பது போல் சத்தம் கேட்கவே, அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர் கோவிந்தராஜ் கோவில் அருகே சென்று பார்த்தபோது கோவில் முன்பு உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதே சமயத்தில் கோவில் பூசாரி கோவில் நடை திறப்பதற்காக வந்து உள்ளார். அவரிடம் நடந்ததை கோவிந்தராஜ் கூறினார். இதையடுத்து இருவரும் வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூன்று பேர் கோவில் உண்டியலை உடைத்து துணியில் பணத்தை சுற்றி எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும் உண்டியலை உடைக்க உளி மற்றும் கம்பிகளை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது. இதனால் கோவில் மதில் சுவர் வரையில் பணம் மற்றும் சில்லைறை காசுகள் சிதறி கிடந்தது. இதையடுத்து காவல்துறையினர் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை நியூ தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் கோவில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் கோவிலுக்குள் புகுந்து பித்தளை விளக்கு மற்றும் பித்தளை சொம்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடியது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்கள் கருப்பராயன் கோவிலில் உள்ள உண்டியல் திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
ai robotics and the future of jobs