கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்.. கோவையில் வாரியத் தலைவர் பேட்டி…

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்.. கோவையில் வாரியத் தலைவர் பேட்டி…
X

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன் குமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குாமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாவட்ட மாநாடு கோவை கொடிசியாவில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோவையில் முதன் முறையாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் துறை சார்ந்த அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர்கள் முத்துச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கட்டுமானத் துறையை ஊக்கப்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் மாநாடு நடைபெற உள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறைக்கு மத்திய மற்றும் மாநிலத்தில் தனி அமைச்சகம் வேண்டும், கட்டுமானப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய உற்பத்தியாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் பாதிக்காத வகையில் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும்.

பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், வீடு மற்றும் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் நிலத்தரகர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்தவித பிரச்னையும் இல்லை.

சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்புடன் உள்ளனர். அவர்களும் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குாமார் தெரிவித்தார்.

Tags

Next Story