கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: 1.200 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: 1.200 கிலோ பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட ஜீவா

வாகராயம்பாளையம் காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அந்த இளைஞரை கருமத்தம்பட்டி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவா வயது 19 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை கைது செய்த கருமத்தம்பட்டி போலீசார் அந்த இளைஞர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜீவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!