சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட ராகுல் தாஸ்.

மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

கோவை மாவட்டம், சூலூர் கருமத்தம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் மில் ஒன்றில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் தாஸ் என்பவர் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அதே மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெற்றோர் தங்களது 15 வயது மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 15 வயது சிறுமியுடன் ராகுல் தாசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், சிறுமியை கண்டித்துள்ளனர். பெற்றோர் கண்டித்ததால் சிறுமி ராகுல் தாஸிடம் தெரிவிக்க, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராகுல் தாஸ் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறுமியை கடத்திச் சென்றுள்ளான்‌. அங்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் கடந்த 3 மாதங்களாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் தனிப்படை அமைத்து மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கி இருந்த ராமதாஸ் மற்றும் சிறுமியை கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்த போலிசார், ராகுல் தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!