வீடு இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு

வீடு இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X
இடிந்து விழுந்த வீடு.
கனமழையின் காரணமாக சேதமடைந்த வீட்டின் மேற்க்கூரை, சுவரை சரி செய்ய சென்ற கூலித்தொழிலாளி பலி.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள பொன்னேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பண்ணாரி. கூலித் தொழிலாளியான இவர், ஏடி காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டின் சுவர் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள இடத்திற்கு சென்ற நிலையில் மேற்கூரை மற்றும் சுவரை சரி செய்யும் பணியில் இன்று மதியம் பண்ணாரி ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென மேற்கூரை மற்றும் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.

இந்த இடிபாடுகளில் சிக்கிய பண்ணாரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த, அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி பண்ணாரி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து இடிபாடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு பண்ணாரி மீட்கையில் அவர் உயிரிழந்த கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பண்ணாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வருவாய் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!