சூலூர் தொகுதியில் அதிமுக வெற்றி

சூலூர் தொகுதியில் அதிமுக வெற்றி
X
சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி 31 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுகவிற்கு சாதகமான தொகுதிகளில் ஒன்றான கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் அதிமுக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இம்முறையும் அது தொடர்கிறது.

சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி 31 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கந்தசாமி ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 968 வாக்குகளும், திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பிரிமியர் செல்வம் 87 ஆயிரத்து 36 வாக்குகளும் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!