விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு
X

சோமனூரில் மூடப்பட்டுள்ள கடைகள்.

விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 47 வது நாளை எட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக சோமனூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 47 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சோமனூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, சாமளாபுரம், தெக்கலூர் ஆகிய பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஆயிரக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. சோமனூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்வாதரமாக விசைத்தறி தொழில் விளங்கி வருவதாகவும், விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!