சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் : விவசாயிகள் கைது
![சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் : விவசாயிகள் கைது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் : விவசாயிகள் கைது](https://www.nativenews.in/h-upload/2020/12/16/882355-img-20201216-wa0013.webp)
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோவையில் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூன்றாவது நாளாக வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரியும் 2020 மின்சார சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கோயமுத்தூர் மாவட்டம் கணியூரில் உள்ள சுங்கச்சாவடியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் 2020 மின் சட்டத்தை எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர் முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu