கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X
தீப்பற்றி எரிந்த லாரி. 
கோவை வெள்ளலூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை வெள்ளலூர் எல்ஜி நகர் பேஸ்-1 பகுதியில் உள்ள தனியார் இடத்தில் பல ஆண்டுகளாக லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று, அதன் அருகில் கொட்டபட்டிருந்த கழிவு, பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் மளமளவென்று எரிந்தன.

இந்த தீ பரவி அருகில் நின்றிருந்த லாரியும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்த தெற்கு தீயணைப்பு துறையினர், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போத்தனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!