கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை

கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை
X

கோவை சூலூர் அருகே, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு, மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். 

கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் கிராமம் உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடை, ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை, அடையாளம் தெரியாத நபர்கள், கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று மதுபான பாட்டில்களை திருடி உள்ளனர்.

இன்று காலை, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டு இருப்பதை, சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கடை ஊழியருக்கு தெரியப்படுத்தினர்.

கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்தபோது, 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india