வெங்காய பாதுகாப்பு பட்டறைக்கு மானியம்

வெங்காய பாதுகாப்பு பட்டறை அமைக்க, விவசாயிகளுக்கு மானியம் தரப்படுகிறது.
Onion Market -சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு அறிக்கை:
நடப்பாண்டில், சூலுார் வட்டாரத்தில், பல எக்டரில் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. தற்போது, விலை குறைந்து, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.இதனால், அறுவடை செய்த வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாத்து, உரிய விலை கிடைக்கும் போது, விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை பாதுகாக்கும் பட்டறை அமைக்க தோட்டக்கலைத்துறை மானியம் வழங்கி வருகிறது. ஒரு விவசாயிக்கு, 87 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக வழங்கப்படும். பாதுகாக்கும் வெங்காயத்தை அதிக விலை கிடைக்கும் போது விற்கவும், விதை வெங்காயமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.விருப்பம் உள்ள விவசாயிகள், சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது 98655-53306 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu