கோவையில் கஞ்சா விற்பனை: 3 பேரை கைது செய்த போலீசார்
கைதானவர்கள்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் அதிரடி சோதனை நடைபெற்றது.
சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ராமகிருஷ்ணா(26), விக்னேஷ் (19) மற்றும் சிவக்குமார்(20) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 1.100 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu